முகப்புகோலிவுட்

பிரித்விராஜ் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய துல்கர் சல்மான்.!! வைரலாகும் புகைப்படங்கள்..

  | July 28, 2020 17:41 IST
Dulquer Salmaan

துல்கர் சல்மான் தனது வரவிருக்கும் ‘குருப்’ திரைப்படத்திலிருந்து சிறிய ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டார்

மோலிவுட், கோலிவுட் என இரண்டிலும் பார்வையாளர்களுக்கு பிடித்த நட்சத்திரமான துல்கர் சல்மான் இன்று 34 வயதை எட்டியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் தொழில்துறை நண்பர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், துல்கர் சல்மான் தனது மனைவியுடன், குடும்பத்துடன் நெருங்கிய நண்பரான, நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் குடும்பத்துடன் சேர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படத்தை அவர்களது பகிர்ந்து கொண்டார்.

புகைப்படத்தில், துல்கர் சல்மான், அவரது மனைவி அமல் சுஃபியா, பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் அவரது மனைவி சுப்ரியா ஆகியோர் காணப்படுகிறார்கள்.

பிருத்விராஜ் பிறந்த நாள் கேக்கை துல்கருக்கு  உட்டிவிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு இன்ஸ்டாகிராமில் “நகரத்தின் சிறந்த பர்கர் சமையல்காரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!” என்று பதிவிட்டுள்ளார். மேலும் சில புகைப்படங்களை பிருத்விராஜின் மனைவியும் பகிர்ந்து கொண்டு, துல்கருக்கு பிறந்தநாளை வாழ்த்தினார். அவர் எழுதியதாவது “பிறந்தநாள் வாழ்த்துக்கள் DQ! இந்த வருடம் உங்களுக்கு மேலும் நிறைய சிறந்ததை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நண்பர்கள்” என்றார்.

மேலும், டோவினோ தாமஸ், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் துல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

பணி முன்னணியில், துல்கர் சல்மான் தனது வரவிருக்கும் ‘குருப்' திரைப்படத்திலிருந்து சிறிய ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டார் மற்றும் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு போர் வீரரின் காதல் கதை கொண்ட புதிய திரைப்படம் ஒன்றை அறிவித்துள்ளார். மேலும், நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்குநராக அறிமுகமான கோலிவுட் திரைப்படமான தனது ‘ஹே சினாமிகா' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com