முகப்புகோலிவுட்

ஒரு ராணுவ வீரனின் காதல் கதை.. வைரலாகும் துல்கரில் புதிய பட போஸ்டர்..

  | July 28, 2020 23:27 IST
Dulquer Salmaan

1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு பீரியட் காதல் கதையாக இப்படம் உருவாகவுள்ளது.

பெரும் வெற்றிபெற்ற ‘நடிகையர் திலகம்' (மஹாநடி) படத்தின் தயாரிப்பாளர்களான வையெஜந்தி மூவீஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில், துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் தங்களுடைய புதிய படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

வையெஜந்தி மூவீஸ் ஏற்கெனவே ‘பிரபாஸ்21' படத்தை அறிவித்த நிலையில், இப்போது இந்த அறிவிப்பும் நாடு முழுவதும் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய சினிமாவில் நினைவுகூரத்தக்க 50 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் விதமாக, வைஜெயந்தி மூவீஸ் சமீபத்தில் ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும்,  ஒரு மிகப்பெரிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். இது தவிர நந்தினி ரெட்டியின் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது மற்றும் ஜதி ரத்னலுவின் படமும் முடியும் தருவாயில் உள்ளது.

அவர்களின் அடுத்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். “ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை” என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படம் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்ற நேர்மறை அதிர்வுகளை உருவாக்குகிறது.

துல்கர் ஏற்கெனவே ‘நடிகையர் திலகம்' படத்தில் ‘ஜெனிமி கனேசன் கதாபாத்திரத்தை ஏற்று அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த புதிய படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார். 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு பீரியட் காதல் கதையாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.

வைஜெயந்தி மூவீஸ் வழங்கும் இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் சார்பாக பிரியங்கா தத், ஸ்வப்னா தயாரிக்கிறார்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com