முகப்புகோலிவுட்

'நண்பர்களுடன் தளபதி விஜய்..!' - சஞ்சீவ் வெளியிட்ட throwback புகைப்படம்

  | May 14, 2020 07:26 IST
Abroad Trip

துனுக்குகள்

 • 2002ம் ஆண்டு முதல், முன்னணி தனியார் தொலைக்காட்சிகளில்
 • அவரோடு இணைந்து நடித்தது மட்டும் அல்ல, கல்லூரி பருவத்தில்
 • நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கடந்த 2014ம் ஆண்டு
2002ம் ஆண்டு முதல், முன்னணி தனியார் தொலைக்காட்சிகளில் பல சின்னத்திரை நாடகங்களில் நடிகராக வளம் வருபவர் தான் சஞ்சீவ் வெங்கட். பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வலம்வந்தாலும் அதற்கு முன்பாகவே 1989ம் ஆண்டு பிரபல இயக்குநர் வாசு இயக்கத்தில் வெளியான பொன்மன செல்வன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். தளபதி விஜய் நடிப்பில் ஆரம்பக்காலத்தில் வெளியான சந்திரலேகா, நிலவே வா மற்றும் பத்ரி போன்ற படங்கள் தொடங்கி புதிய கீதை முதல் இன்று மாஸ்டர் படம் வரை பல படங்களில் இவர் அவரோடு இணைந்து நடித்துள்ளார். 

அவரோடு இணைந்து நடித்தது மட்டும் அல்ல, கல்லூரி பருவத்தில் இருந்தே இவர் விஜயின் மிக நெருக்கமான நண்பர் என்பதும் நாம் அறிந்ததே. இந்நிலையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பிரபலமாகி வருகின்றது throwback புகைப்படங்களை வெளியிடும் வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய் மற்றும் பிற நண்பர்களுடன் அவர் கல்லூரியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சஞ்சீவ் தற்போது இன்னொரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கடந்த 2014ம் ஆண்டு அவர் தளபதி விஜய் மற்றும் தனது நண்பர்களுடன் வெளிநாடு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படத்தை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com