முகப்புகோலிவுட்

'நம்புறேன், இணையுறேன்..!!' - சென்னைக்காக 'நாமே தீர்வில்' இணையும் நடிகர் கஸ்தூரி

  | June 06, 2020 08:04 IST
Makkal Neethi Maiam

துனுக்குகள்

 • கொரோனா பாதிப்பில் தமிழகம் நேற்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது
 • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தொடர்ந்து சென்னையில் அதிக
 • கமலின் இந்த அறிக்கைக்கு வரவேற்பும் ஆதரவும் தெரிவித்துள்ளார் பிரபல நடிகை
கொரோனா பாதிப்பில் தமிழகம் நேற்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்த பாதிப்பு 27 ஆயிரத்து 256-ல் இருந்து 28 ஆயிரத்து 694 ஆக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் நேற்று 1,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 86 பேருக்கும், காஞ்சிரபுத்தில் 15 பேருக்கும், திருவள்ளூரில் 64 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தொடர்ந்து சென்னையில் அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதை சுட்டிக்காட்டி "என்னைப்போல பலரின் கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது.", என்று கூறி சென்னையை மீட்டெடுக்க தனிமனித முயற்சிக்கு சாதி, மத, கட்சி பேதமின்றி ஒன்றிணைய நேற்று அழைப்பு விடுத்தார். 

தற்போது கமலின் இந்த அறிக்கைக்கு வரவேற்பும் ஆதரவும் தெரிவித்துள்ளார் பிரபல நடிகை கஸ்தூரி. அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "இதுக்கு முன்னாடி கால் பண்ண சொன்ன   கட்சி, காவேரி மாதிரியில்லாம, உருப்படியான விஷயமா இருக்கும்னு எதிர்பாக்குறேன், நம்புறேன், இணையுறேன். என் சென்னைக்காக. பார்ப்போம்." என்று கூறியுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com