முகப்புகோலிவுட்

‘யாரோ’ முதல் சிங்கிள் வெளியானது..!

  | February 27, 2020 17:42 IST
Yaaro

இப்படத்திலிருந்து ‘என் மோகத் திரை’ எனும் பாடல் முதல் சிங்கிளாக வெளியாகியுள்ளது.

சந்தீப் சாய் எழுதி-இயக்கி, தானே கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘யாரோ'. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடித்துள்ளார். சஸ்பன்ஸ் த்ரில்லர் கதைக்களம் கொண்ட இப்படத்தை டேக் ஓகே ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் வெங்கட் ரெட்டி தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கான பாடல்கள் மற்றும் பின்னணி இசையினை ஜோஸ் ஃப்ரான்க்லின் கம்போஸ் செய்துள்ளார். கே.பி பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை அனில் க்ரிஷ் தொகுத்துள்ளார்.

அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்படத்திலிருந்து ‘என் மோகத் திரை' எனும் பாடல் முதல் சிங்கிளாக வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ப்ரொமோஷன் அளிக்கும் விதமாக இதனை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்