முகப்புகோலிவுட்

தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ டிரெய்லர் வெளியானது!

  | August 24, 2019 17:38 IST
Dhanush

துனுக்குகள்

  • அக்டோபர் மாதம் 6ம் தேதி இப்படம் வெளியாகிறது
  • மேகா ஆகாஷ் அறிமுகமான முதல் படம் இது
  • சசிகுமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மேகா ஆகாஷ் சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா'. இரண்டு படப்பிடிப்புகளை எல்லாம் முடித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படம் வெளியாகும் தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
 
இந்நிலையில் இப்படத்தின் பாடலான ‘மறு வார்த்தை பேசாதே' கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இப்படம் கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் இதன் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
 
இது முற்றிலும் காதல் திரைப்படம் என்பதை ட்ரெய்லரை பார்க்கும்போது அறிந்துக்கொள்ள முடிகிறது. வித்யாசமான கதைக்களத்தைக் கொண்டுள்ள இப்படம் செப்டம்பர் 6ம்தேதி திரைக்கு வரவிருக்கிறது என்கிற அறிவிப்போடு ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. நீண்ட பிரச்னைகளுக்கு பிறகு இப்படம் வெளியாவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்