முகப்புகோலிவுட்

'நான் அப்படியே மிதக்கிறேன்' - வாழ்த்துக்கு நன்றி சொன்ன ஷெரின் ஷ்ரிங்கர்

  | May 07, 2020 13:05 IST
Sherin

துனுக்குகள்

 • ஊரடங்கு தற்போது சில பகுதிகளில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது
 • இந்நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்தநாளை வீட்டில்
 • கடந்த மே 2ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர் தனக்கு
கொரோனா பரவல் காரணமாக நாடே முழு ஊரடங்கில் உள்ளது, ஏற்கனவே மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தற்போது சில பகுதிகளில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திரைப்பட சங்கத்தினர் ஏற்கனவே நிலுவையில் உள்ள படங்கள் மற்றும் போஸ்ட் production நிலையில் உள்ள படங்களுக்கான பணிகளை தொடங்கி நடத்த தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கான பதில் இன்னும் கிடைக்காத நிலையில் இன்னும் திரைப்பட பணிகள் எதுவும் தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்தநாளை வீட்டில் இருந்தவாறே கொண்டாடி வருகின்றனர். அண்மையில் நடிகை ஷெரின் ஷ்ரிங்கர் கோலிவுட்டில் தனது முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படப்பிடிப்பு தளத்திலிருந்து (ooty) ஒரு த்ரோபேக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் அதை “அனைத்து த்ரோபேக்குகளின் தாய்” என்று தலைப்பிட்டார்.

தற்போது கடந்த மே 2ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர் தனக்கு வாழ்த்திய அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். அத்தோடு சேர்த்து அழகிய போட்டோ ஷூட் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com