முகப்புகோலிவுட்

கௌதம் மேனனுக்கு ஜீ தமிழ் வழங்கிய முக்கிய பொறுப்பு..!

  | December 03, 2019 11:42 IST
Zee Cini Awards 2020

துனுக்குகள்

 • ஜீ தமிழ் டிவி ‘ஜீ சினி அவார்ட்ஸ் தமிழ்2020’ விருது நிகழ்ச்சியை நடத்துகிது
 • இந்நிகழ்ச்சி ஜனவரி 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 • இதில் சிறந்த திரைப்பட படைப்புகள், கலைஞர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சினிமா விருதுகளுக்கு நடுவர் குழுவில் ஒருவராக இயக்குனர் கௌதம் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சி முதல்முறையாக ‘ஜீ சினி அவார்ட்ஸ் தமிழ் 2020' எனும் விருது நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில், கடந்த 2018 டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 2019 நவம்பர் 30-ஆம் தேதி வரை வெளியான திரைப்படங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், சிறந்த திரைப்படம், இயக்குநர், நாயகன், நாயகி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்படவுள்ளது.
3 வருடங்கள் கழித்து, என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், குயின் வெப் சீரீஸ், ஜோஷுவா-இமை போல் காக்க ஆகிய படைப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும் இந்த நிலையில், மகிழ்ச்சியாக இருக்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு மேலும் ஒரு பொறுப்பு கிடைத்துள்ளது. இந்த விருது நிகழ்ச்சியில் சிறந்த படம், இயக்குனர், நாயகன், நாயகி என விருது பெறுவோர்களைத் தேர்ந்தெடுக்கும் ஜூரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 
  
மேலும், இந்த தேர்வு செய்யும் குழுவில் நடிகை சுஹாசினி மணிரத்னம், கரு.பழனியப்பன், திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com