முகப்புகோலிவுட்

தேர்வுகள் “முற்றுப் புள்ளி அல்ல” மாணவர்களுக்கு ஆதரவாக செல்வராகவன் ட்வீட்.!

  | September 17, 2020 11:26 IST
Selva Raghavan

"வாழ்க்கை பல்லாயிரக்கணக்கான வாய்ப்புகளை உங்கள் பக்கம் அனுப்பிக் கொண்டே இருக்கும்! துணிவுடன் நிமிர்ந்து நில்லுங்கள்"

நீட் தேர்வை எழுதுவதற்கு முன்பே தமிழகத்தில் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தொற்றுநோய் பரவலுக்கு இடையில் பரீட்சைகளை நடத்தி மாணவர்களை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியதற்காக அரசாங்கத்திற்கு எதிராக பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

கோலிவுட் பிரபலங்களில் நடிகர் சூர்யா தான் இதுபோன்ற கடினமான நேரங்களில் தேர்வுகளை நடத்துவதற்காக அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர். மேலும் அவர் NEET தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு மக்களையும் கேட்டுக்கொண்டார். அவருக்கு பல கோலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள் ஆதரவாக முன்வந்தனர்.

இந்நிலையில், பிரபல இயக்குநர் செல்வராகவன் பரீட்சை காரணமாக அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு சிறிய ஆலோசனையுடன் ஆறுதல் வழங்கியுள்ளார்.

தேர்வுகள் வாழ்க்கையை தீர்மானிக்காது என்று மாணவர்களிடம் சொல்ல அவர் தனது ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்திகொண்டார். அவர் தனது பதிவில் “என் அன்பு நண்பர்களே! அனுபவத்தில் சொல்கிறேன்.சத்தியம். தேர்வு என்பது முக்கியமாக இருக்கலாம்.ஆனால் முற்றுப் புள்ளி அல்ல. அதில் தோற்றாலும் வாழ்க்கை பல்லாயிரக்கணக்கான வாய்ப்புகளை உங்கள் பக்கம் அனுப்பிக் கொண்டே இருக்கும்! துணிவுடன் நிமிர்ந்து நில்லுங்கள். வாழ்க்கை அரவணைத்துக் கொள்ளும்!” என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com