முகப்புகோலிவுட்

“அதியன் சாரை நான் தோழர் என்றுதான் அழைப்பேன்” கயல் ஆனந்தியின் சிறப்பு நேர்காணல்!

  | August 28, 2019 16:10 IST
Kayal Anandhi

துனுக்குகள்

 • இரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பில் மீண்டும் நடித்திருக்கிறார் ஆனந்தி
 • இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது
 • தென்மா இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
சமூகத்தை நேர்மையான பாதையில் கொண்டு செல்ல அதற்கான விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய படைப்புகள் தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடியவையே. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஆக்கப்பூர்வமான படைப்பாக மக்கள் கொண்டாடினர். இது போன்ற வலுவான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும் கலைஞர்களுக்கு பொறுப்புகள் அதிகம் என்றே சொல்லலாம். அந்த வகையில் ‘பரியேறும்  பெருமாள்' படத்தில் தனது இயல்பான நடிப்பில் அனைவரின் கவனத்தையும் திசைத்மாற்றியவர் “ஜோ” கதாபாத்திரத்தில் படத்தின் நாயகியாக நடித்த ஆனந்தி. பரியேறும் பெருமாள் படத்திற்கு முன்பு அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ஆனந்திக்கு திருப்பு முனையாக அமைந்த படம் இது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார். அந்த வகையில் இயக்குநர் பா. இரஞ்சித்தின் இரண்டாவது தயாரிப்பான ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். பா.இரஞ்சித்தின் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கும் இப்படத்தில் மீண்டும் ஒரு வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் ஆனந்தி. இன்று மாலை இப்படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கும் நிலையில் இப்படம் குறித்து ஆனந்தியிடம் பேசினேன்,
 
n9ah9s9o

 
மீண்டும் பா. இரஞ்சித் தயாரிப்பில் நடிக்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்?

 
இரஞ்சித் சாருடைய தயாரிப்பு என்றாலே ஒரு சுதந்திரம் இருக்கும். இங்கு எல்லோரும் அவர்களுடைய கருத்துகளை சொல்ல முடியும் அந்த கருத்துகள் குறித்து விவாதிக்க முடியும். அந்த அளவிற்கு கருத்துரிமைக்கான சுதந்திரம் எனக்கு இருந்தது. மேலும் இந்த படத்தை இரஞ்சித் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் இயக்கி இருக்கிறார். அவருடைய கடின உழைப்பு என்னை பிரம்மிக்க வைத்தது. முதலில் நான் அவரை சந்தித்த போது இந்த படம் இப்படி ஒரு அவுட் புட் வரும் என்று நான் எதிர்பாக்கவில்லை. ஒவ்வொரு வசனமும் அவ்வளவு எளிமையாவும், யதார்த்தமாகவும் இருந்தது. அவரோடு வேலைபார்ப்பது எனக்கு எளிமையாக இருந்தது. இவர்கள் அனைவரும் புரட்சிகரமானவர்கள், எதை பேசினாலும் அதில் ஒரு அரசியல் கண்ணோட்டம் இருக்கும்  இவரால் காதல் காட்சிகள் எடுக்க முடியுமா அப்படி எடுத்தால்  எப்படி இருக்குமோ? நல்லா வருமா, எனக்கு இதில் பெரிய அளவில் ஸ்கோப் இருக்காது என்று நினைத்திருக்கிறேன். ஆனால் நான் நினைத்ததை எல்லாவற்றையும் உடைத்தெரிந்து விட்டார் இயக்குநர். அவ்வளவு அழகா வந்திருக்கிறது படம். ஒவ்வொரு காட்சியும் கற்பனையா இல்லாமல் இயல்பான வாழ்க்கைக்குள் நுழைந்தது போல் இருந்தது. ஒரு நல்ல அனுபவம் எனக்கு கிடைத்திருக்கிறது.
 
7aiclu7o

 
இந்த படத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
 
எனக்கு காட்சிகள் குறைவா இருக்கா நிறைய இருக்கா என்பதை விட இந்த கதைக்கு ஏற்றவாறு வலுவான ஒரு கதாபாத்திரம் எனக்கு இருந்தால் போதும் என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் மட்டுமே படமும் நன்றாக இருக்கும். அதன்படி இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை கொடுத்தாலே போதும் என்று நினைக்கிறேன். எனக்கு ஏற்ற தளத்தை அதியன் எனக்கு ஏற்படுத்தி கொடுத்தார். அதனால் சவால்கள் எதையும் நான் எதிர்கொள்ளவில்லை என்றுதான் சொல்வேன்.
 
 
இயக்குநர் அதியன் பற்றி சொல்லுங்கள்?

 
அதியன் சாரை நான் தோழர் என்றுதான் அழைப்பேன். அவரிடம் எல்லாவற்றையும் பேசமுடிந்தது. எனக்குள் இருக்கும் சந்தேகங்களை சுதந்திரமாக அவரிடம் கேட்டு உரையாட முடிந்தது. படப்பிடிப்பு இடைவேலையிலோ அல்லது முடிந்த பின்போ அவர் கடந்து வந்த பாதை அவர்களுடைய வாழ்க்கைமுறை, அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பது குறித்து நிறைய பேசுவார். சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்களை பேசுவார் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் எனக்கு ஒரு புத்தகத்தை கொடுத்திருக்கிறார் அந்த புத்தகத்தின் பெயர் ‘தி ரூட்ஸ்' அலெக்ஸ் ஹேலி இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். படித்துவருகிறேன்.
 
இந்த படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும்..
 
“இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதற்கு முன்பு நடித்த படங்களைகாட்டிலும் ரெம்பவே வித்தியாசமாக இருக்கும். பரியேறும் பெருமாள் படத்தின் ஜோவை இந்த படத்தில் பார்க்கவே முடியாது. இந்த படத்தில் நான் ரொம்ப தைரியமா பேசக்கூடிய பொண்ணா என்னுடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இந்த படத்தில் வரும் காதல், ரொமான்ஸ், எல்லாவற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாக எனக்கு அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரத்தை நான் நேசித்தேன். முற்றிலும் ஒரு மாறுபட்ட ஆனந்தியை இந்த படத்தில் பார்க்கலாம். இப்படியான படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதே சமயம் கற்பனை கதாபாத்திரமாக இல்லாமல் இதுபோன்ற இயல்பான கதாபாத்திரத்தில் நடிப்படி என்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
 
sqqfs0k

 
  
திணேஷ் கூட முதல் முறையாக நடித்திருக்கிறீர்கள் அந்த அனுபவம் எப்படி இருந்தது?
 
 
இந்த படத்திற்கு உடல் உழைப்பு ரொம்ப முக்கியமா இருந்தது. அதை எல்லாமே அவர் எதிர்கொண்டார். மிகக்கடுமையாக அவர் உழைத்திருக்கிறார். இந்த அளவிற்க 100 சதவீதம் உழைப்பை மற்ற நடிகர்களால் கொடுக்க முடியுமா? கொடுப்பார்களா என்று எனக்கு தெரியாது. அந்தளவிற்கு கடின உழைப்பு திணேஷிடம் இருந்தது. படம் பார்க்கும் போது அது எல்லோருக்கும் புரியும். எல்லோரையும் போல நானும் படம் பார்க்க காத்திருக்கிறேன்.
 
நவீன் இயக்கத்தில் அலாவுதீனும் அற்புத கேமிராவும் படத்தில் நடித்திருக்கிறீர்கள் அதைப் பற்றி….
 

“நவீன் சார் எனக்கு நல்ல நண்பர். இந்த படத்திற்கு பிறகு எனக்கு ஒரு நல்ல குடும்ப நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இந்தப்படக்குழு ரொம்ப சின்னது. மொத்தமே 20 பேர்தான் இருப்போம். கேமிரா, ஒளிபதிவு போன்றவற்றைப்பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். இந்த குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள்தான். நாங்க ஜாலியா போவோம் லொக்கேஷன் பார்ப்போம் சினிமா படம் எடுக்கிறோம் என்கிற என்னமே எனக்கு இல்லாமல் இருந்தது, நண்பர்களோடு சேர்ந்த சுற்றிபார்க்க போனது போல் இருந்தது. அதியன், நவீன், மாரி செல்வராஜ் இவர்களோடு உரையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய சமூகம் சார்ந்த விஷயங்களை இவர்களிடம் நான் கற்றுக்கொண்டேன்.
 
 
உங்களுடைய அடுத்த படங்கள் என்னென்ன…
 
“ராஜசேகர் இயக்கத்தில் “எங்கே அந்த வானம்” படத்தில் நடித்திருக்கிறேன் இந்த படம் ஒரு அழகான காதல் கதையை மையமாகக்கொண்ட படம். சாந்தனுவுடன் விக்ரம் சுகுமாரன் இயக்கும் படத்தில் நடிக்கிறேன்” என்றார்
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com