முகப்புகோலிவுட்

“எனக்கும் யுவனுக்கு ஒரு டீல் இருக்கு” - பிரேம்ஜி

  | April 09, 2019 10:12 IST
Rk Nagar

துனுக்குகள்

  • இந்த படத்தை சரவணன் இயக்கி இருக்கிறார்
  • வெங்கட் பிரபு இப்படத்தை தயாரித்திருக்கிறார்
  • இந்த படம் ஏப்ரல் 12ல் வெளியாகிறது
இயக்குநராக தனது படைப்புகள் மூலம் தமிழ்ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் வெங்கட் பிரபு தயாரிப்பு வேலையில் தடம்பதிக்க துவங்கி இருக்கிறார். இவருடைய தயாரிப்பில், இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது “ஆர்.கே.நகர்”. வைபவ், அஞ்சனா கீர்த்தி, சனா அல்தஃப், குட்டி கோபி இன்னும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு பிரேம்ஜி இசை அமைத்திருக்கிறார். நடிப்பு, இசை என இரண்டு தளங்களிலும் இதுவரை எந்தவித தொய்வும் இல்லாமல் பயணித்துக்கொண்டிருக்கும் பிரேம்ஜியுடன் ஆர்.கே.நகர் பயணம் குறித்து கேட்டேன்….

“ஆர்.கே.நகர் படம் நல்லா வந்திருக்கு, இது குடும்பப்படும் அண்ணனோடு தயாரிப்பு. வைபவ் நடித்திருக்கிறார் எங்களுடைய கேங்கு. இயக்குநர் சரவணன் எங்களுடைய உறவினர். நான் இசை, அதனாலதான் இதை குடும்பப்படம்னு சொன்னேன். இந்த படத்தில் எல்லாம் இருக்கிறது. இது ஒரு கமர்ஷியல் மசாலா படம். சண்டை, காமெடி, நல்ல காதல், அரசியல் இப்படி எல்லாம் இருக்கு” அரசியல் என்றதும் உங்களுடைய படத்தின் பெயர் நினைவிற்கு வருகிறது. அதைப்பற்றி சொல்லுங்க…

“நிச்சயமா… ஆர்.கே. நகரைச்சுற்றியே படம் நகரும். வைபவ்விற்கு ஒரு பிரச்னை போகும், 4 மாணவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு ஒரு பிரச்னை போகும். அந்த பகுதியில் நடக்கும் அரசியல் ஒரு பக்கம் இவை எல்லாம் எப்படி ஒரு புள்ளியில் இணைகிறது பிரச்னையை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதுதான் படம். அது போக ஒரு அழுத்தமான கருத்தையும் இந்த படம் சொல்லும்.” 
இந்த படத்தில் உங்களுடைய இசை, எப்படி வந்திருக்கிறது… “எல்லா படங்கள் போலவும் இதுவும் நல்லா வந்திருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டுலாம் இசை அமைக்கவில்லை. ஏற்கனவே முன்னோடிகள் உருவாக்கி வைத்துவிட்டு சென்ற பாதையிலே நானும் பயணிச்சுட்டு இருக்கேன். படத்தில் மொத்தம் 4 பாடல்கள். நாளும் நல்லா வந்திருக்கு. முதல்ல ரெண்டு மாடல் அழகிகளோடு வைபவுக்கு இண்ட்ரோ பாட்டு. காணா குணாவுடைய பப்பரமிட்டாய் பாடல் ஏற்கனவே இந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒரு மோட்டிவேஷன் பாட்டு இருக்கு, ஒரு ஐட்டம் பாடல், எல்லாம் நல்லா வந்திருக்கு” 

நடிப்பு, இசை எப்படி சமாளிக்கிறீங்க… “எனக்கும் யுவனுக்கும் ஒரு டீல் இருக்கு நான் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றால் அந்த படத்திற்கு யுவன் மியூசிக் இருக்கும். நான் அந்த படத்தில் இல்லையென்றால் அந்த படத்திற்கு நான் மியூசிக். அண்ணன் இயக்கத்தில் அடுத்து வரும் பார்ட்டி படத்துல நான் நடிக்வில்லை அதனால நான் அந்த படத்துக்கு மியூசிக் பண்ணியிருக்கேன். இப்படி எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு உடன்பாடு இருக்கு. ஆகமொத்தத்துல எங்க குடும்பத்துக்குள்ள இருக்கும்” 

ஆர்.கே.நகர் படத்துல அழுத்தமான கருத்து இருக்கிறதா சொன்னீங்க என்ன அது...? “இந்த சமூகத்தில் இன்றைய காலகட்டத்தில் செய்யக்கூடாத தப்புயெல்லாம் இளைஞர்கள் செய்யுறாங்க. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த படம் சொல்லும் அழுத்தமான கருத்து” என்றவருக்கு வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றேன்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்