முகப்புகோலிவுட்

"மொத்தமே 200 குடித்தனம் தான்" - புதிய வடிவில் வெளியான "ஆண்டாவ காணோம்" ட்ரைலர்..!

  | August 17, 2020 09:49 IST
Jsk Prime Media

துனுக்குகள்

 • ‘அண்டாவ காணோம்'. கடந்த 2018ம் ஆண்டே இந்த படம் முழுமை பெற்று
 • இப்படத்தை ‘JSK ஃபிலிம் கார்ப்பரேஷன்' நிறுவனம் ஜே.சதீஷ் குமாருடன் இணைந்து
 • ஏற்கனவே டீஸர் வெளியான நிலையில் தற்போது சிறப்பான புதிய ட்ரைலர் ஒன்று
தமிழில் விஷாலின் ‘திமிரு' படத்தில் மிரட்டலான வில்லியாக அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. இதனைத் தொடர்ந்து ‘வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது, ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘அண்டாவ காணோம்'. கடந்த 2018ம் ஆண்டே இந்த படம் முழுமை பெற்று பல அப்டேட்கள் வெளியான நிலையில் சில காரணங்களால் இந்த படம் வெளிவராமல் இருந்தது.

சி.வேல்மதி இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வீட்டில் உள்ள ‘அண்டா'விற்கு கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார். அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இதற்கு ஒளிப்பதிவாளராக பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளராக சத்யராஜ் நடராஜன், கலை இயக்குநராக ஏ.கே.முத்து, பாடலாசிரியராக மதுரகவி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தை ‘JSK ஃபிலிம் கார்ப்பரேஷன்' நிறுவனம் ஜே.சதீஷ் குமாருடன் இணைந்து ‘லியோ விஷன்' நிறுவனம் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டே இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் சுமார் 3 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தற்போது இந்த படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி இந்த படம் OTT தளத்தில் வெளியாகின்றது. 
ஏற்கனவே டீஸர் வெளியான நிலையில் தற்போது சிறப்பான புதிய ட்ரைலர் ஒன்று வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் சூர்யா அவர்கள் இதை வெளியிட்டுள்ளார், முற்றிலும் புதிய வடிவில் இந்த ட்ரைலர் வெளியாகியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com