முகப்புகோலிவுட்

இசை துறையில் முத்திரை பதித்து, 11வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சாம் சி.எஸ்..!

  | July 30, 2020 23:47 IST
Sam Cs

ராக்கெட்ரி, சூர்ப்பனகை, ராஜவம்சம், கண்ணை நம்பாதே, வெப் சீரிஸ் என பல படங்கள் சாம் சி.எஸ் கைவசம் இருக்கின்றன.

பத்து ஆண்டுகளுக்குள் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பல பாராட்டுக்குரிய படங்களைத் தந்து, இசையுலகில் தன் அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார். சிறந்த இசைப் பாடல்களை தந்ததோடல்லாமல், மிகச் சிறந்த பின்னணி இசையையும் வழங்கி, யூ ட்யுபின் ஓ.எஸ்.டி. ஜூக் பாக்ஸில் அதிக வரவேற்பு பெறும் இசைக் கலைஞராகவும் திகழ்கிறார்.

வெகுவாக பாராட்டப்பட்ட 'விக்ரம் வேதா' படத்தின் தனித்துவமான இசை, அவரது அழுத்தமான முத்திரைக்கு ஒரு பிராண்ட் நேம் கொடுத்திருப்பதுடன் மேலும் பல நல்ல படவாய்ப்புகளையும் தேடித் தந்திருக்கிறது.

e7ctgvi

இது குறித்து விவரித்த இசையமைப்பாளர் சாமி சி.எஸ். "திரைத் துறையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை காரணமாகத்தான் இந்த வெற்றி சாத்தியமானது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்.  காரணம் அவர்கள்தான் எனது பணியை அங்கீகரித்து எண்ணற்ற ரசிகர்களிடம் நான் சென்றடைய உதவியவர்கள். தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எனது இசைப் பணியைப் பாராட்டி ஊக்குவித்ததை எனக்குக் கிடைத்த விலை மதிப்பற்ற பரிசு என்றுதான் சொல்ல வேண்டும்.

rgg55dmg

ரசிகர்களோ தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே என்னைக் கருதுகிறார்கள். சமூக வலைதளங்களில் அவர்கள் போடும் பதிவுகள், ட்வீட்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் செய்திகளை எல்லாம் பார்க்கும்போது, சந்தோஷமாக இரு்க்கிறது என்று சொல்லி ஒரு புன்னகையுடன் சாதாரணமாக அதைக் கடந்து போய்விட முடியாதபடி என் கண்களை அவை ஈரமாக்குகின்றன. ரசிகர்களின் இந்த அன்பு மழை என்னை தெய்வீகத் தன்மையாக உணர வைக்கிறது. நேர்மறையான இந்த அதிர்வலைகள் மேலும் எனக்கு சக்தியையும் நம்பிக்கையையும் தருவதுடன், இன்னும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்ற பொறுப்பையும் அதிகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது" என்றார்.

h6k16cs

பெரும் பொருட் செலவில், தயாரிப்பின் பல்வேறு படி நிலைகளில் இருக்கும் சுமார் ஒரு டஜன் படங்கள் தற்போது சாம் சி.எஸ். கைவசம் இருக்கின்றன.

மாதவனின் 'ராக்கெட்ரி', அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம், ரெஜினா கேஸண்ட்ராவின் 'சூர்ப்பனகை', விஜய் சேதுபதியின் '800', சசி குமாரின் 'ராஜவம்சம்', ஜெய் நடிக்கும் 'எண்ணித் துணிக', உதயநிதி ஸ்டாலினின் 'கண்ணை நம்பாதே', 'மோச கல்லு' தெலுங்குப் படம், ரவி தேஜாவின் பெயரிடப்படாத படம், ஹரீஷ் கல்யாண் நடிக்கும் நேரடித் தெலுங்குப் படம், புஷ்கர் காயத்ரியின் வெப் சீரிஸ் ஆகியவற்றுடன் வேறு சில படங்களும் சாம் சி.எஸ்.கைவசம் இருக்கின்றன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com