முகப்புகோலிவுட்

"மீ டூ மாதிரி, ஜாதி டூ..!!" - பிரபல நடிகர் நட்டி போட்ட ட்வீட்

  | May 29, 2020 15:58 IST
Natty

துனுக்குகள்

  • தமிழில் 2002ம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் யூத் படத்தின் மூலம்
  • அண்மையில் வெளியான வால்டர் படம் இவர் நடித்த 15வது படம் என்பது
  • இந்நிலையில் தனது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ஆர்வம்
தமிழில் 2002ம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் யூத் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவும், நடிகராகவும் களமிறங்கியவர் தான் நடராஜன் சுப்ரமணியன் என்னும் நட்டி. பரமக்குடியில் பிறந்த நட்டி, பாலிவுட் உலகில் இருந்து தான் தனது பயணத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் இவர் தமிழில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது வெறும் மூன்று படங்கள் தான், அந்த மூன்று படங்களும் தளபதி விஜயின் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் வெளியான வால்டர் படம் இவர் நடித்த 15வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மிளகா என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இவர் உச்ச நாயகர்கள் பட்டியலில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத நட்டி அண்மைக்காலமாக பல டீவீட்களை பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்ட ட்வீட் ஒன்றில் "மீ டூ மாதிரி,  ஜாதி டூ ன்னு கொண்டு வந்தாங்கன்னா.. எல்லா ஆண்மகன்களுக்கும் பின்னாடி ஒரு வெப்  சீரிஸ் ஏ  பண்ணலாம்... இது எல்லோருக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன்...", என்று கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com