முகப்புகோலிவுட்

'இது வேற லெவல் ட்ரிக் ஷாட்' - காலால் கூடைப்பந்து ஆடும் பிரபல நடிகர்..!

  | August 08, 2020 11:51 IST
Football

துனுக்குகள்

 • 2006ம் ஆண்டு crazy மோகன் வசனத்தில் வெளியான ஜெர்ரி என்ற படத்தின் மூலம்
 • இந்த லாக் டவுன் காலத்தில் வீட்டில் தனது நேரத்தை செலவிட்டு வருகின்றார்
 • கூடைப்பந்தில் மிகவும் பிரபலமாக பேசப்படும் சில 'ட்ரிக் ஷாட்'களை செய்து
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். 'எதிர்நீச்சல்', ‘தமிழ்ப்படம்-2' மற்றும் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து 'கத்தி', 'பைரவா' போன்ற படங்களில் நடித்துள்ள சதீஷ், தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களை ஈர்த்தவர். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட சதீஷ், பிரபல நடிகரும் நாடக கலைஞருமான மறைந்த திரு. Crazy மோகன் அவர்களுடன் 8 ஆண்டுகள் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2006ம் ஆண்டு crazy மோகன் வசனத்தில் வெளியான ஜெர்ரி என்ற படத்தின் மூலம் தான் இவர் நடிகராக களமிறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தமிழ் படம், மதராசபட்டினம், மரீனா, தாண்டவம் போன்ற பல நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் சதீஷ். கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து கலக்கிவருகிறார் நடிகர் சதீஷ். 

கடந்த 2019ம் ஆண்டு சிந்து என்பவரை மணந்த சதீஷ் இந்த லாக் டவுன் காலத்தில் வீட்டில் தனது நேரத்தை செலவிட்டு வருகின்றார். ஏற்கனவே Hulkகாக மாறி ட்விட்டர் தளத்தை கலக்கிய அவர் தற்போது கூடைப்பந்து வீரராக மாறி அசத்தியுள்ளார். கூடைப்பந்தில் மிகவும் பிரபலமாக பேசப்படும் சில 'ட்ரிக் ஷாட்'களை செய்து அசத்தியுள்ளார் நடிகர் சதீஷ்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com