முகப்புகோலிவுட்

பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நாயகன்

  | October 22, 2019 15:16 IST
Ponniyin Selvan Film

துனுக்குகள்

 • பொன்னியின் செல்வன் படத்தை இயக்குகிறார் மணிரத்னம்
 • ஐஷ்வர்யா ராய் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
 • மேலும் இப்படம் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தெரிகிறது
“செக்கச்சிவந்த வானம்” படத்தை அடுத்து இயக்குநர் மணிரத்னம் பிரம்மாண்டமாக இயக்கவிருக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில் பாலிவுட், கோலிவுட், மாலிவுட் பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
 
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், ஐஷ்வாயா ராய் மேலும் மலையாள நடிகர் ஜெயராம், பார்த்திபன், அமலா பால், ஐஷ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.
 
grivldf
   
இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் 'மங்காத்தா', 'இதற்கு தானே ஆசைப்பட்டாய்', 'பாலகுமாரா', 'ஜீரோ' உள்ளிட்ட படங்களில் நடித்த அஸ்வின், 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதன்படி, ''கல்லூரி மாணவனாக 'ஆயுத எழுத்து' படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகள் செய்தேன். தற்போது சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com