முகப்புகோலிவுட்

'இந்தியன் 2' திரைப்படத்தில் இருந்து வெளியேரிய பிரபல நடிகர்?

  | October 24, 2019 18:03 IST
Indian 2

துனுக்குகள்

  • இந்தியன் 2 -ல் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார
  • இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்
  • இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது
சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் இருந்து பிரபல நடிகர் ஒருவர் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இந்த காலத்திற்கு ஏற்றவாறு இயக்கி வருகிறார் இயக்குநர் சங்கர்.
 
இந்த படத்தில் காஜல், அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவாணி சங்கர், விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
a2orq0v



இந்நிலையில் ரேடியோ ஜாக்கியாக இருந்து தனது வேகமான பேச்சாற்றலால்
நகைச்சுவை நடிகர் ஆனவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் 'இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் 'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து ஜசரி கணேஷ் தயாரிக்கும் ஒரு படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com