முகப்புகோலிவுட்

‘Thala 60’' வலிமை' படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்

  | October 31, 2019 14:12 IST
Thala 60

துனுக்குகள்

 • அஜித்தின் 60வது படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது
 • இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கவுள்ளது
 • இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கவுள்ளார்
‘Valimai update': இந்த ஆண்டு சிவா(Shiva) இயக்கத்தில் அஜித்(Ajith) நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்குமார் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வணிக ரீதியான வெற்றியை பெற்றுத்தந்தது.
 
கடந்த ஆண்டு இந்தியில் வெளியான ‘பிங்க்' படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் முதல் முறையாக அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மீண்டும் போனிகபூர், வினோத் கூட்டணியில் அஜித் இணைந்துள்ளார்.
 
வலிமை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் டிசம்பர் 20 ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. இதற்கான வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. யுவன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது கலை இயக்குனராக தோட்டா தரணி இணைந்துள்ளாராம். இவர் கமல்ஹாசன் நடித்த நாயகன், இந்தியன் படங்களுக்காக சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவர். இவர் ஏற்கனவே அஜித் நடித்த வரலாறு படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com