முகப்புகோலிவுட்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தில் இணையும் பிரபல இயக்குனர்

  | November 22, 2019 14:52 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சங்கத்தமிழன்
  • தளபதி 64 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
  • யாதும் ஊரே யாவரும் கேளிர் விஜய்சேதுபதியின் 33வது படம்
ஆண்டு தோறும் அதிக திரைப்படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் மக்கள் செல்வனாக தமிழ் திரையுலகை அலங்கரித்து வருகிறார்.
 
இந்த ஆண்டு இவர் நடிப்பில் ‘பேட்ட', ‘சூப்பர் டீலக்ஸ்', ‘சிந்துபாத்', ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்படங்களைத் தொடர்ந்து ‘கடைசி விவசாயி', ‘மாமனிதன்', ‘ லாபம்', ‘தளபதி 64' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
விஜய் சேதுபதியின் 33வது படமான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வெங்கட கிருஷ்ணா இயக்கி வரும் இந்தப் படத்தில் பிரபல இயக்குனர் மோகன்ராஜா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com