முகப்புகோலிவுட்

"குறை சொன்னதோடு இல்லாமல்..!" - ஜோதிகாவை பாராட்டும் விஜய் பட இயக்குநர்..!

  | August 10, 2020 13:52 IST
Perarasu

துனுக்குகள்

 • ஒருமுறை ஜோதிகா படப்பிடிப்புக்காக சென்றிருந்த போது மோசமாக பராமரிக்கப்பட்டு
 • குறை சொல்வதே தொழிலாக கொண்டவர்கள் மத்தியில்
 • 25 லட்சம் அளித்த திருமதி. ஜோதிகா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
பிரபல நடிகை ஜோதிகா ‘அகரம்' நிறுவனத்தின் மூலம் அண்மையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் நன்கொடையாக அளித்தார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் படுக்கை வசதிகள் செய்திட அவர் இந்த உதவியை செய்துள்ளார். மேலும், குழந்தைகள் பிரிவை வண்ண ஓவியம் செய்யவும், குழந்தைகளுக்கான பூங்காவை புனரமைத்து அழகுபடுத்தவும் பங்களித்தார்.

ஒருமுறை ஜோதிகா படப்பிடிப்புக்காக சென்றிருந்த போது மோசமாக பராமரிக்கப்பட்டு வந்த தஞ்சாவூரில் உள்ள அரசு மிராசுதார் மருத்துவமனையின் பராமரிப்பற்ற நிலையைப் பார்த்து வருத்தப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரபலமான தனியார் விருது வழங்கும் விழாவில் இது குறித்து அவர் பேசினார் அந்த பதிவில், கோயில்களுக்கு நாம் நன்கொடை அளிக்கும் அதே அளவிற்கு மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிப்பது குறித்த ஜோதிகாவின் உரை சர்ச்சைக்குரியதாக மாறியது. இதைத் தொடர்ந்து, இணையத்தில் பலர் நடிகைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர். அவரது அறிக்கை பல அரசியல் மற்றும் மத அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல இயக்குநர் பேரரசு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "குறை சொல்வதே தொழிலாக கொண்டவர்கள் மத்தியில், குறை சொன்னதோடு இல்லாமல், குறையை நிவர்த்தி செய்ய நிதியுதவியை 25 லட்சம் அளித்த திருமதி. ஜோதிகா அவர்களுக்கு பாராட்டுக்கள்..!" என்று தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com