முகப்புகோலிவுட்

அரசியலில் கமல் விஸ்வரூபம் எடுப்பார் - பிரபல இயக்குனர் நம்பிக்கை!

  | November 18, 2019 16:35 IST
S A Chandrasekhar

துனுக்குகள்

  • நேற்று சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
  • எஸ்.ஏ.சந்திர சேகர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டார்
  • ரஜினி இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்
நடிகர் கமலின் 60 பிறந்த நாள் விழா கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கமல் ரசிகர்கள் பல்வேறு நலதிட்ட உதவிகள் செய்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் “\திரை துறைக்கு கமல் வந்து 60 ஆண்டு காலம் ஆனதை ஒட்டி சென்னையில் நேற்று நடைபெற்ற 'உங்கள் நான்' நிகழ்வு சென்னையில் திரைகலைஞர்கள் பங்கேற்க பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முன்னணி திரைக்கலைஞர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
 
இந்நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட நடிகர், இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகரத் கமலின் அரசியல் நுழைவு குறித்து பேசினார். அப்போது,
 
 "கமலஹாசன் துணிச்சலலோடு அரசியலுக்கு வந்து விட்டார். அவரின் துணிச்சலை பாராட்ட வேண்டும். அரசியலில் கமல் நிச்சயம் விஸ்வரூபம் எடுப்பார்" என கூறினார். மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்படுவதாகவும். நடிகர் ரஜினியும், கமலும் இரு ஜாம்பவான்கள் இணைந்தால் தமிழத்திற்கும், தமிழர்களுக்கும் நல்லது என்றும் தெரிவித்தார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்