முகப்புகோலிவுட்

இயக்குநர் சமுத்திரக்கனி படத்தில் பிரபல தொகுப்பாளினி

  | November 09, 2017 11:40 IST
Samuthirakani

துனுக்குகள்

  • இப்படத்திற்கு ‘சங்கத் தலைவன்’ என டைட்டில் சூட்டியுள்ளனர்
  • இதனை இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கவுள்ளார்
  • படத்தின் ஷூட்டிங் நவம்பர் 15-ஆம் தேதி துவங்கவுள்ளது
சித்தார்த்தின் ‘உதயம் NH4’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிமாறன். இதனைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணின் ‘பொறியாளன்’ மற்றும் ஜெய்யின் ‘புகழ்’ ஆகிய 2 படங்களை இயக்கினார். தற்போது, மணிமாறன் புதிய படமொன்றை இயக்க கமிட்டாகியுள்ளார். இதில் ஹீரோவாக இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளாராம்.

‘சங்கத் தலைவன்’ என டைட்டிலிட்டுள்ளனர். சமுத்திரக்கனியுடன் இனியா, கருணாஸ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ மூலம் தயாரிக்கவுள்ளாராம். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல தொகுப்பாளினி ரம்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங்கை வருகிற நவம்பர் 15-ஆம் தேதி முதல் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com