முகப்புகோலிவுட்

சுஷாந்தை தொடர்ந்து உதய் கிரண் தற்கொலை வழக்கையும் சி.பி.ஐக்கு மாற்ற ரசிகர்கள் கோரிக்கை!

  | August 26, 2020 00:58 IST
Uday Kiran

உதய் கிரண் தமிழில் ‘பொய்’, ‘வம்பு சண்டை’ மற்றும் ‘பெண் சிங்கம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஜூன் 14, 2020 அன்று காலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரண வழக்கை பொறுப்பேற்குமாறு சிபிஐயிடம் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் கேட்டுக் கொண்டது.

இந்த வழக்கை மத்திய புலனாய்வு குழு (சிபிஐ) விசாரித்து வருகிறது. சித்தார்த் பிதானி, நீரஜ் மற்றும் சாவந்த் ஆகியோரை மும்பையில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் வைத்து விசாரித்துள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ குழுவின் அனைத்து விசாரணைகளுக்கும் மத்தியில், இப்போது டோலிவுட் & கோலிவுட் நடிகர் உதய் கிரனின் தற்கொலை வழக்கிலும் சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமென ரசிகர்கள் கோருகின்றனர். #JusticeForUdayKiran என்ற ஹாஷ்டேக் சமீபத்தில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்ததது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 5, 2014 அன்று தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாகக் கூறப்படும் மிகவும் திறமையான உதய் கிரண். அவரது முதல் மூன்று படங்களான சித்ரம், நுவ்வு நேனு மற்றும் மனசந்த நுவ்வே ஆகியவை பிளாக்பஸ்டர் ஆகும், இதனால் அவருக்கு "ஹாட்ரிக் ஹீரோ" என்ற பட்டம் கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக, வாழ்க்கை அவருக்கு வெவ்வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது. உதயின் வெற்றி வரைபடம் பல தோல்விகளுக்குப் பிறகு பல ஆண்டுகளாக வீழ்ச்சியடையத் தொடங்கியது, இது அவரது உயிரைப் பறித்ததாகக் கூறப்படுகிறது.

உதய் கிரண் தனது நீண்டகால நண்பர் விஷிதாவை அக்டோபர் 24, 2012 அன்று மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டார்.

உதய் கிரண் தமிழில் ‘பொய்', ‘வம்பு சண்டை' மற்றும் ‘பெண் சிங்கம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கீழே உள்ள ட்வீட்களைப் பாருங்கள்:
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com