முகப்புகோலிவுட்

'நான் ஆசிர்வதிக்கப்பட்டவள்' - தாய்மை பற்றி எமி ஜாக்சன் எழுதிய பதிவு

  | March 24, 2020 12:03 IST
Emy Jackson

துனுக்குகள்

  • எனது சின்னக் குழந்தை ஆண்ட்ரியாஸ்ஸுக்கு முன்னால்
  • மாடல் அழகியான இவர் கடந்த சில வருடங்களாக
  • எமி ஜாக்ஸன் தனது தாய்க்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்
2010ம் ஆண்டு வெளியான மதராசப்பட்டினம் என்ற அருமையான திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். மாடல் அழகியான இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். அண்மையில் திருமணம் முடித்து தாயான இவர் தற்போது ஒரு உருக்கமான பதிவினை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள் என்ற உணர்வுடன் எனது முதல் அன்னையர் தினத்தில் கண் விழிக்கிறேன். என குறிப்பிட்டுள்ளார். எனது சின்னக் குழந்தை ஆண்ட்ரியாஸ்ஸுக்கு முன்னால் என் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது கூட எனக்கு நினைவில் இல்லை. எல்லாம் அர்த்தமற்று இருந்தது என்றும் கூறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்த தேவன் போன்ற முகத்தையும், குட்டிச் சிரிப்பையும் ஒவ்வொரு நாளும் பார்ப்பது, அவனுக்குச் சிறந்த முன்மாதிரியாக, பாதுகாவலராக, நம்பிக்கைக்குரியவளாக, தோழியாக அன்னையாக இருக்க எனக்குக் கிடைக்கும் ஊக்கம், எனது அழகான அம்மாவிடம் இருந்து கிடைத்தது. அம்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் தான் எனக்கு உண்மையான ஊக்கம். நிபந்தனையற்ற அன்பை எனக்குத் தந்ததற்கு நன்றி என எமி ஜாக்ஸன் தனது தாய்க்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்