முகப்புகோலிவுட்

'மூடர்கள் சூழ் இந்தியா' - இயக்குநர் ரத்ன குமாரின் காட்டமான பதிவு

  | March 24, 2020 11:52 IST
Ratna Kumar

துனுக்குகள்

  • ரத்ன குமார் இந்த நிகழ்வு குறித்து காட்டமான பதிவு
  • வீட்டில் இருக்க சொன்னால் வீதியில் இறங்கி
  • சற்று பயமாகவே உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்
பரவி வரும் கொரோனாவால் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், நகை கடைகள் உள்ளிட்ட பல இடங்கள் மூடப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்த நோய் குறித்த விழிப்புணர்வினையும், கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விஷயங்களையும் அரசும் மற்ற பிரபலங்களும் தங்களது சமூக வலைத்தளங்கள் வழியாக அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வியாழன் அன்று நாட்டு மக்களிடையே பேசிய மோடி, கடந்த ஞாயிற்றுக் கிழமை கண்டிப்பாக எல்லோரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினார்.

இதை மக்களும் சிறப்பாக கடைபிடித்தனர், ஆனால் அன்றைய நாளின் இறுதியில் நடந்த விஷயம் தான் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. அன்றைய தினம் நமக்காக வெளியில் போராடும் பலதரப்பட்ட வேலைகளை செய்யும் நல்ல உள்ளங்களை பாராட்டும் வண்ணம் எல்லோரும் வீட்டிற்குள் இருந்தவாரே மாலை 5 மணிக்கு கைதட்டுவது போன்ற ஒலி எழுப்ப கேட்டுக்கொண்டார். ஆனால் அன்று மாலை மக்கள் தெருக்களில் வந்து ஒன்றுகூடி தங்களின் நன்றியை தெரிவித்தது அன்றைய நாள் கடைப்பிடிக்கப்பட விஷயத்தை அர்த்தமற்றதாக ஆகிவிட்டது என்று பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இயக்குநர் ரத்ன குமார் இந்த நிகழ்வு குறித்து காட்டமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "போராட வர சொன்னால் வீட்டில் இருந்துக்கொண்டும், வீட்டில் இருக்க சொன்னால் வீதியில் இறங்கியும் சுத்தத்தால் விரட்ட வேண்டிய கிருமியை சத்தத்தால் விரட்ட நினைக்கும் மூடர்கள் சூழ் இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்