முகப்புகோலிவுட்

இந்தியாவில் டிக் டாக்கிற்க்கு தடை - சந்தோஷத்தில் சாக்ஷி போட்ட ட்வீட்..!!

  | June 30, 2020 07:54 IST
Tik Tok Ban In India

துனுக்குகள்

 • இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட
 • பயனர்களின் அந்தரங்க தகவல்கள், விதிகளுக்கு மாறாக நடப்பது போன்ற
 • நடிகை சாக்ஷி அகர்வால் அரசின் இந்த முடிவால் பெரிய அளவில் மகிழ்ச்சி
இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59  ஆப்களுக்கு  மத்திய அரசு  தடை விதித்துள்ளது. கடந்த 15ம் தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கி 20  பேரை கொன்றனர்.  இதற்கு பொருளாதார ரீதியில் பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு  இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
 
பயனர்களின் அந்தரங்க தகவல்கள், விதிகளுக்கு மாறாக நடப்பது போன்ற நடவடிக்கையில் இந்த ஆப்கள் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில்,  59  ஆப்களுக்கான  தடையை பிறப்பித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. 

தற்போது இந்த அரசின் இந்த நடவடிக்கைக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே சீனா பொருட்களை புறக்கணிப்போம் என்ற ஒரு செயலை முன்னெடுத்த நடிகை சாக்ஷி அகர்வால் அரசின் இந்த முடிவால் பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் "இறுதியில் டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்"

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com