முகப்புகோலிவுட்

'தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தலை சீக்கிரம் நடத்துங்க' - தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட கறார் உத்தரவு!

  | February 12, 2020 14:14 IST
Tamil Producer Council Election

தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

துனுக்குகள்

 • 'தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தலை சீக்கிரம் நடத்துங்க'
 • தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட கறார் உத்தரவு!
 • விஷால் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த தேர்தலை  நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் தேர்தலை நடத்தி முடித்த பிறகு ஜூலை 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் சங்கத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்த கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் தற்போது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com