முகப்புகோலிவுட்

75 நாட்களுக்குப் பிறகு மகனை சந்தித்த விஷ்ணு விஷால்..!

  | June 05, 2020 18:55 IST
Vishnu Vishal

கடைசியாக அவர் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் காணப்பட்டார்.

நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘நீர்பறவை', ‘முண்டாசுப்பட்டி',  ‘ஜீவா',  ‘இன்று நேற்று நாளை', ‘ராட்ச்சசன்' ஆகிய படங்களில் நடித்ததற்காக விஷ்ணு பிரபலமான நடிகராக வலம் வருகிறார். கடைசியாக அவர் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் நடித்திருந்தார்.

பூட்டுதல் நாட்களில், விஷ்ணு சமூக ஊடக பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். தனது வொர்க்அவுட் வீடியோ, த்ரோபேக் புகைப்படங்கள், வரவுள்ள திரைப்பட அப்டேட்கள் என பலவற்றை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் அவர், இடையில் தனது மகனைப் பிரிந்து பல நாட்களாக நேரில் சென்று பார்க்கமுடியாமல் இருப்பதாக வருத்தப்பட்டார்.

இந்நிலையில், இன்று, 75 நாட்களூக்குப் பின்னர் இறுதியாக தனது மகன் ஆர்யனை சந்தித்து தனது பொன்னான நேரத்தை செலவழித்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தில் காணப்பட்ட நடிகர் விஷ்ணு விஷால், அடுத்ததாக ஜகஜால கில்லாடி, எஃப்.ஐ.ஆர், மோகந்தாஸ் போன்ற பல திரைப்படங்களுடன் தயாராக உள்ளார், மேலும் பூட்டுதலின் போது சில ஹிட் திரைப்படங்களின் தொடர்ச்சிகளுக்கு தனது முயற்சியை தொடங்கியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com