முகப்புகோலிவுட்

கே.ஜி.எஃப்-2 பட லேட்டஸ்ட் அப்டேட்..!

  | December 14, 2019 13:09 IST
Kgf Chapter 2

துனுக்குகள்

  • கே.ஜி.எஃப் திரைப்படத்தை பிரஷாந்த் நீல் இயக்குகிறார்.
  • இப்படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.
  • K.G.F chapter-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்து பிரம்மாண்ட ஹிட்டான கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்து வைரல் ஹிட்டான திரைப்படம் கே.ஜி.எஃப் : சாப்டர் 1. கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார்.
இப்படட்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், தற்போது இப்படம் குறித்த முக்கிய தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, K.G.F chapter-2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இமாதம் 21-ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு வெளியாகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்