முகப்புகோலிவுட்

கார்த்தி - ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் சூர்யா...!

  | November 15, 2019 10:08 IST
Karthi

துனுக்குகள்

  • கார்த்தியின் அடுத்த படம் ‘தம்பி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
  • இப்படத்தில் கார்த்தியுடன் ஜோதிகா நடித்துள்ளார்.
  • இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.
கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியாகவிருக்கும் ‘தம்பி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று வெளியிடுகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான ‘கைதி' திரைப்படம்,  ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நல்ல ஃபார்மில் இருக்கும் நடிகர் கார்த்தி அடுத்ததாக மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ‘தம்பி' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனது அண்ணன் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சத்தியராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தம்பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார். இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கார்த்தி “ஜோ அன்னியுடனான எனது அடுத்த பட்டத்தின் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொள்ள காத்திருக்க முடியவில்லை.! இந்த FirstLook 6 மணிக்கு அண்ணா சூர்யாவால் வெளியிடப்பட உள்ளது!” என்று கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்