முகப்புகோலிவுட்

கொஞ்சம் பொறுங்க..! சிவகார்த்திகேயன் பிறந்தநாள் சர்ப்ரைஸ் இன்னும் முடியல..!! இன்றே ‘அயலான்’ ஃபர்ஸ்ட் லுக்..!

  | February 17, 2020 16:10 IST
Ayalaan

‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கும் இந்த ஏலியன் தொடர்பான படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று காலை அவரின் 'டாக்டர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதனை கொண்டாடி தீர்க்கும் முன்னரே, எஸ்.கே-வின் ‘அயலான்' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

KJR Studios தயாரிப்பில் ‘ஹீரோ' திரைப்பட வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் இரண்டு மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில் ஒப்பந்தமானார். ‘டாக்டர்' மற்றும் ‘அயலான்'  ஆகிய அந்த இரண்டு படங்களையுமே KJR Studios தான் மீண்டும் தயாரிக்கிறது.

இரு படங்களுக்குமே மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று ‘டாக்டர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இணையத்தில் பிறந்தநாளுக்கான வாழ்த்துக்களோடு, ‘டாகடர்' பட ஃபர்ஸ்ட் லுக்கையும் கொண்டாடிவந்தனர். இந்த நிலையில், பர்த்டே பாய் சிவகார்த்திகேயனுக்கும், அவரது திவிர ரசிகர்களுக்கும் இரண்டாவது சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது KJR Studios. அதாவது ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்றே வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

‘இன்று நேற்று நாளை' திரைப்பட இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கும் இந்த ஏலியன் தொடர்பான படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 7.07 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com