முகப்புகோலிவுட்

சிவகார்திகேயனின் 'வாழ்' - இன்று மாலை வெளியாகும் 'ஆஹா' முதல் சிங்கள்..!

  | September 07, 2020 11:10 IST
Aahaa

துனுக்குகள்

  • கடந்த 2019ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது,
  • இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவர்களின் தயரிப்பில் உருவாகி உள்ள அடுத்த
  • 'ஆஹா' என்ற முதல் சிங்கள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று
மிமிக்கிரி ஆர்டிஸ்டாக களமிறங்கி, இன்று 'அடுத்த இளைய தளபதி' என்று பல விமர்சகர்கள் கூரும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என்று இவருக்கு அனைத்து வயதிலும் ரசிகர்கள் அதிகம். கடந்த சில காலமாகவே தான் நடிக்கும் கதைகளில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 

கடந்த 2019ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது, மிஸ்டர். லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ என்று மூன்று படங்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்திற்க்கான அப்டேட் வந்துள்ளது. 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் ஆர்.டி ராஜா அவர்கள் தயாரிக்க, ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவர்கார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 'அயலான்' 'Destination Earth' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 'சயின்ஸ் பிக்ஷன்' படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவர்களின் தயரிப்பில் உருவாகி உள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. 'வாழ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் 'ஆஹா' என்ற முதல் சிங்கள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தந்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com