முகப்புகோலிவுட்

ஹிப் ஹாப் ஆதியின் #BreakUpSong வெளியானது..!

  | December 07, 2019 20:07 IST
Naan Sirithal

துனுக்குகள்

 • ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு ‘நான் சிரித்தால்’ 3-வது திரைப்படமாகும்.
 • இப்படத்தை இயக்குநர் சுந்தர். சி தயாரிக்கிறார்.
 • இப்படத்தில் ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ‘நான் சிரித்தால்' பட சிங்கில் ட்ராக் ‘பிரேக்கப் சாங்' தற்போது வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கவுள்ள திரைப்படம்  ‘நான் சிரித்தால்'. அவர் நடித்த மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய இரு படங்களையும் தயாரித்த, இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி இப்படத்தையும் தயாரிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹிப் ஹாப் தமிழா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதே நேரத்தில் இந்த போஸ்டரை ரஜினிகாந்தும் வெளியிட்டார். இப்படத்தில் கதாநாயகியாக ஐஷ்வர்யா மேனன் நடிப்பதாக ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார். மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகளை விரைவில் அறிமுகப்படுத்துவதாக அவர் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகியுள்ளது. Break Up Song என பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் இன்று மாலை 5 மணிக்கு சென்னை ராயபேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் வெளியிடப்பட்டது.


  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com