முகப்புகோலிவுட்

ஜிம் ஒர்க்அவுட்டை மிஸ் பண்ணும் அருண் விஜய்! த்ரோபேக் வீடியோ வெளியிட்டு அசத்தல்.!

  | May 20, 2020 19:08 IST
Arun Vijay

வியட்நாமில் உள்ள கலிஃபோர்னியா செஞ்சூரியன் ஜிம்மில் எடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் வெடித்ததன் காரணமாக, படங்கள் மற்றும் சீரியல்களின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரபலங்களும் வீட்டிலேயே தங்கி, சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் ரசிகர்களிடையே இந்த கொடிய தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், நடிகர் நடிகைகள் யோகா, உடற்பயிற்சி, சமையல் போன்றவற்றை செய்வது, த்ரோபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது உள்ளிட்ட தங்களுக்கு பிடித்த செயல்களை செய்து நேரத்தைக் கழிக்கின்றனர்.

அதேபோல், தன் உடற்கட்டுக்கு பெயர் போன நடிகர் அருண் விஜயும் வீட்டிலேயே பல ஒர்க்அவுட்களை செய்துவருகிறார். அந்த வீடியோக்களையும் அவர் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களின் பதிவிட்டு வருகிறார்.

அவ்வாறு, அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு த்ரோபேக் ஒர்க்அவுட் வீடியோவின் மூலம், அவர் தனது Gym workout-ஐ எந்த அளவிற்கு இழந்து வருத்தப்படுகிறார் என வெளிப்படுத்தியுள்ளார்.

வியட்நாமில் உள்ள கலிஃபோர்னியா செஞ்சூரியன் ஜிம்மில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ நிச்சயமாக பல இளைஞர்களுக்கு தங்களை ஃபிட்டாக  வைத்திருக்க ஊக்குவிக்கும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com