முகப்புகோலிவுட்

யோகா பயிற்சில் அசத்தும் தமன்னா.!! வைரலாகும் அட்டகாசமான புகைப்படங்கள்.!

  | July 24, 2020 12:54 IST
Tamannaah Bhatia

தமன்னா கடைசியாக தமிழில் விஷாலின் ‘ஆக்‌ஷன்’ திரைப்படத்தில் காணப்பட்டார். அதையடுத்து எந்த தமிழ்ப் படங்களிலும் கமிட் ஆகவில்லை.

நடிகை தமன்னா பாட்டியா மிகப்பெரிய உடற்பயிற்சி ஆர்வலராக அறியப்படுகிறார். இன்ஸ்டாகிராமில் தனது ஒர்க்அவுட் அமர்வுகளின் படங்களை அவர் அடிக்கடி பதிவிடுகிறார். கடந்த வாரம் அவர், கொட்டும் மழையில் நின்று பயிற்சி செய்து, யோகா மீதான தனது அன்பின் ஒரு காட்சியை நமக்குக் கொடுத்தார்.

அந்த புகைப்படம் செம வைரலானது. அவர் அந்த புகைப்படத்துக்கு “உடற்பயிற்சி, சிகிச்சை மற்றும் ஷவர்.... அனைத்தும் ஒரே நேரத்தில்! மும்பை பருவமழை - நீங்கள் எனது உடற்பயிற்சிகளையும் ஆனந்தமாக ஆக்குகிறீர்கள்” என தலைப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்ட தனது யோகா பயிற்சி புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. பல வித ஆசனங்களை எளிதாகச் செய்து மிரட்டியுள்ளார் தமன்னா.

அந்த புகைப்படங்களுடன் தனது பதிவில் “ஏராளமான அன்பைக் கொடுக்கவும் பெறவும் இதயச் சக்கரத்தைத் திறக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

அடிக்கடி தனது ஒர்க்அவுட் அமர்வுகளின் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ‘பாகுபலி' நடிகை, சில சமயம் சமையல், த்ரோபேக் புகைப்படங்கள், குடும்பத்துடன் செலவழிக்கும் தருணங்கள் ஆகியவற்றின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதோடு, சமூக பிரச்சனைகளுக்கு எதிரான தனது கருத்துக்களையும் முன்வைப்பதில் தயங்கியது இல்லை.

தமன்னா கடைசியாக தமிழில் விஷாலின் ‘ஆக்‌ஷன்' திரைப்படத்தில் காணப்பட்டார். அதையடுத்து எந்த தமிழ்ப்படங்களிலும் கமிட் ஆகவில்லை. இப்போது, தட் இஸ் மஹாலக்ஷ்மி, சீடிமார் ஆகிய தெலுங்கு படங்களும், போலே சுடியன் எனும் ஹிந்தி படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com