முகப்புகோலிவுட்

நயன்தாரா  நடிக்கும்  திரைப்படத்தில் 4 இசையமைப்பாளர்கள்!

  | November 20, 2019 10:54 IST
Nayanthara

துனுக்குகள்

 • சரவணன், RJ பாலாஜி இணைந்து இப்படத்தை இயக்க உள்ளனர்
 • இப்படதிற்காக நயந்தார விர்தம் இருந்து வருகிறார்
 • இவர் நடித்துள்ள தர்பார் படம் ஜனவரி 9ல் வெளியாகிறது
பிகில் படத்தை அடுத்து நடிகை நயன்தாரா ரஜினியின் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். 

கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்துவரும் நயன்தாரா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகி உள்ள தர்பார் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் 'மூக்குத்தி அம்மன்' என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தை ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்க உள்ளார். வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முழுக்க முழுக்க பக்தி படமாக உருவாகும் இப்படத்தில் ஒரு முக்கிய செய்தி ஒன்றையும் சொல்லவிருப்பதாக பாலாஜி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தப் படத்திற்கு 4 இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடிப்பதாகவும் ஆர்.ஜே. பாலாஜி கூறி இருந்தார். 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com