முகப்புகோலிவுட்

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை, 'பாட்டில் கேப் சேலஞ்ச்'-ல் ஆக்சன் ஹீரோக்கள்!

  | July 04, 2019 13:31 IST
Bottle Cap Challenge

துனுக்குகள்

  • வைரலாகி வரும் 'பாட்டில் கேப் சேலஞ்ச்'
  • ஹாலிவுட் ஆக்சன் ஹீரோ ஜேசன் ஸ்டாதம் இந்த சவாலில் ஈடுபட்டுள்ளார்
  • கோலிவுட்டின் ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த சவாலை செய்துள்ளார்
கடந்த ஆண்டின் கோடை காலத்தில் சமூக தளங்களில் ஒரு சவால் பிரபலமானது, 'கீகி செலஞ்ச்'(KiKiChallenge). கார் நகர்ந்து கொன்டிருக்குபோதே, அந்த காரின் கதவுகளை திறந்து கீழே இறங்கி 'கீகி' பாடலை பாட வேண்டும். பிரபலங்கள் பலர், இந்த சவாலில் ஈடுபட்டபின் இது வைரலானது. அதேபோல, இந்த ஆண்டும் 'பாட்டில் கேப் சேலஞ்ச்'(#BottleCapChallenge) என ஒரு சவால் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவால் என்ன வென்றால், பாட்டிலின் மூடியை கால்களால் உதைத்து, அந்த மூடியை நீக்க வெண்டும். அதே நேரம், பாட்டிலும் கீழெ விழக்கூடாது.

தற்போது, இந்த சவால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த 'பாட்டில் கேப் சேலஞ்ச்' அனைவராலும் முயற்சிக்கப்படுகிறது. ஹாலிவுட்டின் ஆக்சன் ஸ்டார் ஜேசன் ஸ்டாதம் (Jason Statham) முதல் கோலிவிட்டின் ஆக்சன் கிங் அர்ஜுன் வரை இந்த 'பாட்டில் கேப் சேலஞ்ச்'-ஐ அனைவரும் செய்துள்ளனர். 

சென்ற ஆண்டு 'கீகி செலஞ்ச்' போல, இந்த ஆண்டு வைரலாகிறது இந்த 'பாட்டில் கேப் சேலஞ்ச்'!
ஆக்சன் ஸ்டார் ஜேசன் ஸ்டாதம், இந்த  'பாட்டில் கேப் சேலஞ்ச்' சவாலை செய்து அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
 

ஜேசன் ஸ்டாதம் இந்த சவால் செய்வதை கண்டு ஈர்க்கப்பட்டு தான் இந்த சவாலில் பங்கேற்றதாக அக்சய் குமார், தனது 'பாட்டில் கேப் சேலஞ்ச்' வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
 

அதன்பின் ஆக்சன் கிங் அர்ஜுனும் இந்த சவாலை செய்திருந்தார். அவர் செய்த 'பாட்டில் கேப் சேலஞ்ச்' வீடியோவை, அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
 

முன்னதாக இந்த சவால் டேக்வேண்டோ பயிற்சியாளர் மற்றும் வீரரான ஃபராபி டேவ்லெட்சின்-தான் (Farabi Davletchin), முதன்முதலில் 'பாட்டில் கேப் சேலஞ்ச்' ஈடுபட்ட ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்