முகப்புகோலிவுட்

"கடைசிவரை கட்டப்பிரம்மச்சாரி தான்" - பிரேம்ஜி-யை கலாய்க்கும் நடிகர் சதீஷ்..!

  | August 04, 2020 10:33 IST
Premji Amaran

துனுக்குகள்

  • 2005ம் ஆண்டு வெளியான ஞாபகம் வருதே என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு
  • தனது ட்விட்டர் தளத்தில் எப்போதும் நகைச்சுவை ததும்பும் பல டீவீட்களை
  • இதற்கு பதிலளித்துள்ள பிரபல நடிகர் சதீஷ் "கடைசிவரை கட்டபிரம்மச்சாரி தான்"
பிரேம் குமார் கங்கை அமரன், சுருக்கமாக இவரை அனைவரும் பிரேம்ஜி என்று அழைப்பார்கள். பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன், மற்றும் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பி ஆவர். வெங்கட் கதை இல்லாமல் கூட படம் எடுப்பர், ஆனால் தனது தம்பி இல்லாமல் படம் எடுக்கமாட்டார் என்று பலரும் கூறும் அளவிற்கு இவர்களுடைய பாசப்பிணைப்பு உறுதியானது. இசை குடும்பத்தில் பிறந்த பிரேம்ஜி வெளிநாட்டிற்கு சென்று ராப் இசை கற்றவர். இசையமைப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என்ற பன்முக திறமை கொண்டவர். 

2005ம் ஆண்டு வெளியான ஞாபகம் வருதே என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். சாம்பி, பார்ட்டி போன்று அண்மையில் வெளியான படங்கள் இவருடைய இசையில் வெளியான படங்கள் தான். ஜே.டி. ஜெர்ரி இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சந்திரமுகி படத்தில் இளைய திலகம் பிரபு சோகத்தோடு சொன்ன 'என்ன கொடுமை சரவணன் இது' என்ற அந்த வசனத்தை இவர் படு காமெடியாக மாற்றி பேசியது இன்று வரை பலராலும் ரசிக்கப்பட்டு வருகின்றது. 

தனது ட்விட்டர் தளத்தில் எப்போதும் நகைச்சுவை ததும்பும் பல டீவீட்களை பிறர் மனம் புண்படாதவண்ணம் பதிவிடுவது பிரேம்ஜியின் வழக்கம். அண்மையில் அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு ஒன்றில் "உங்களது மனைவியை மதிக்கத்தெரியாத பெண்ணை டேட்டிங் செய்யாதீர்கள் என்று நகைச்சுவையாக கூறினார்". இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பிரபல நடிகர் சதீஷ் "கடைசிவரை கட்டபிரம்மச்சாரி தான்" என்று ரிப்ளை செய்து கலாய்த்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com