முகப்புகோலிவுட்

மகத்தான மனிதர்களைத் தேடி பயணிக்கும் ஜி.வி.பிரகாஷுடன் சிறப்பு நேர்காணல்!

  | June 07, 2019 10:21 IST
Gv Prakash

துனுக்குகள்

  • தனுஷ் நடிக்கும் அசுரன் படத்திற்கு இசை அமைக்கிறார் இவர்
  • சூரரைப் போற்று படத்திற்கு இசை அமைக்கிறார்
  • இவர் நடிப்பில் ஜெயில் திரைப்படம் வெளியாக இருக்கிறது
இசைஅமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மையோடு செயலாற்றும் நீங்கள் சமூகம் சார்ந்த விஷயங்கையும் முன்னெடுத்து வருகிறீர்கள். அதற்கான நேரத்தை எப்படி ஒதுக்குகிறீர்கள்…. 

"முன்னதாகவே அதற்கான திட்டமிடல் இருப்பதால் எளிமையாக நேரத்தை கணக்கிட்டு இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறேன். பெரிய அளவில் சிறமப்பட்டு நேரத்தை செலவழிப்பதற்கான சூழல் எனக்கு ஏற்படுவதில்லை. முன்கூட்டியே என்னுடைய பணிகளை நான் தீர்மாணித்து விடுகிறேன்".
 
 மகத்தான மனிதர்களை சந்திக்கும் புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறீர்கள் ஏன்? என்ன காரணம்? 
 
"சமூகம் சார்ந்த பல வேலைகளை செய்ய பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது அங்கு நெடுங்காலமாக சமூக்கப்பணியில் ஈடுபட்டு வரும் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களை வெளியுலகிற்கு தெரியபடுத்த வேண்டும் என்று தோன்றிது. இவர்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதன் மூலம் பலபேர் இன்ஸ்பெயர் ஆவார்கள் என்று தோன்றியது. ஆகவே மகத்தான மனிதர்களை பேட்டி எடுத்து தெரியப்படுத்த வேண்டும் என்று ‘மகத்தான மனிதர்களை சந்திபோம்' என்று முடிவு செய்து பயணத்தை தொடங்கியிருக்கிறேன்".
 
 மகத்தான மனிதர்கள் என்று அவர்களை எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள்?
 
"இந்த பயணத்திற்கு ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழு சமூகப்பணியில் இருக்கும் மனிதர்களை கண்டறிந்து சிறந்தவர்களை தேர்வு செய்கிறார்கள். அவர்களில் ஒருவரை தேர்வு செய்து நேர்காணல் எடுக்கிறோம்".
 
 இந்த பயணத்தின் நோக்கம் என்ன?
 
"இந்த பயணத்தின் நோக்கம் என்பது, இன்று நேர்மையாக இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி இந்த உலகம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அவர்கள் இந்த சமூகத்தின் தேவையும் கூட. அவர்களை பார்த்து 3பேர் இன்ஸ்பெர் ஆனார்கள் என்றால் அதுதான் என்னுடைய வெற்றி என்று நான் நினைக்கிறேன்".

இந்த பயணத்தில் நீங்கள் சந்திக்கப்போகும் அந்த மகத்தான மனிதர்கள் யார் யார்? 
"நிறைய பேரை சந்திப்பதற்கான திட்டம் இருக்கிறது. முதலாவதாக ஜவ்வாது மலையில் ஆசிரியராக பணியாற்றும் மகாலக்ஷமி என்பரை சந்திக்கப் போகிறேன். அவர் நிறை குழந்தைகளை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து இந்த பயணம் தொடர்கிறது. இப்படி எல்லாத்துறையில் இருந்தும் மனிதர்களை தேர்வு செய்து வருகிறோம்."
 
 எழுவர் விடுதலை குறித்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறீர்கள். அற்புதம்மாளுடன் போராட்ட களங்களுக்கு செல்ல திட்டம் இருக்கிறதா..?
 
"எல்லாவற்றையும் விட அம்மாவின் மிகப்பெரிய முயற்சிக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் அதற்காக என்னால் இயன்ற முறையில் நான் குரல் கொடுத்து வருகிறேன்."
 
திரைத்துறையில் இருந்து சமூகப்பணிக்கு செல்ல உங்களை தூண்டிய விஷயம் என்ன.
 
"ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து இது தொடங்கியது. ஒரு சின்ன முயற்சிதான். மக்கள் நமக்கு இவ்வளவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய சார்பாக ஒரு சிறிய பங்காக நான் இதை நினைக்கிறேன். இது எனக்கு சுமை இல்லை இதை நான் ஒரு பொறுப்பாக நினைக்கிறேன்."
 
தனுஷ், சூர்யா இருவருடைய படத்திற்கும் இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்.
 
"தனுஷ் நடிக்கும் அசுரன் படத்திற்கும். சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு இசை அமைப்பது எனக்கு மகிழ்ச்யாக இருக்கிறது"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்