முகப்புகோலிவுட்

'சூரரை போற்று' அப்டேட்டை வெளியிட்டார் ஜி.வி பிரகாஷ்!

  | October 17, 2019 11:16 IST
G V Prakash

துனுக்குகள்

  • அடுத்த ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படம் வெளியாகி இருக்கிறது
  • சுதா கொங்காரா இப்படத்தை இயக்குகி வருகிறார்
  • படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி வேலைகள் நடந்து வருகிறது
Chennai: என்.ஜி.கே, படத்தை அடுத்து ‘காப்பான்' படத்தில் நடித்திருந்தார் சூர்யா (Suriya). இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏற்கனவே அறிவித்திருந்ததைப்போல சுதா கொங்காரா இயக்கும் ‘சூரரை போற்று' படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குநர்களில் மிக முக்கியமானவர் சுதா கொங்காரா, ‘இறுதி சுற்று' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த இவருடைய திறைமை தற்போது ‘சூரரை போற்று' படத்திலும் தொடர்கிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்னா பாலமுரளி நடிக்கிறார் இவர்களுடன் ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்துள்ளார்.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், பிரபல பாடகர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும், இந்த பாடலின் இசை புதிய அனுபவத்தை அனைவருக்கும் தரும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்து ஆண்டு பொங்கல் விடுமுறை முன்னிட்டு களத்தில் இறக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்