முகப்புகோலிவுட்

பூர்ணாவை மிரட்டிய அதே கும்பல், நடிகை உட்பட மேலும் பல பெண்களை கடத்தல்.! அதிர்ச்சியூட்டும் தகவல்..

  | June 29, 2020 19:11 IST
Poorna

மற்றொரு நடிகை மற்றும் மாடல் உட்பட மூன்று பெண்கள் இதே கும்பலுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகை பூர்ணா ஒரு கும்பலால் பிளாக்மெயில் செய்யப்பட்ட செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதுகுறித்து அவரது தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து கேரளாவில் மரடு போலீசாரால் ஒரு கும்பல் கைது செய்யப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்பு இந்த கும்பல் கோழிக்கோட்டில் உள்ள ஒருவருக்கு திருமண வரன் கேட்டு பூர்ணாவை அணுகியுள்ளது. அவர்களுடன் பூர்ணாவின் குடும்பத்தினர் நட்புறவு கொள்ளத் தொடங்கியபோது, அந்த கும்பல் மீண்டும் அவர்கள் வீட்டிற்குச் சென்று பூர்ணாவை புகைப்படம் மற்றும் வீடியோவை எடுக்கத்தொடங்கியுள்ளது. அதனால், சந்தேகம் அடைந்து அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு பிளாக்மெயில் செய்துள்ளனர்.

rqsdkf28

இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய கும்பலின் ஏழு உறுப்பினர்களையும், மணமகனாக வேஷம் போட்ட சூத்திரதாரி முஹம்மது ஷரீஃப் மற்றும் ரபீக் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது, தெலுங்கு திரைப்பட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்த பூர்ணா கேரளாவுக்கு திரும்பி வந்து தனிமைப்படுத்திக் கொண்டு, வீடியோ கான்பரன்சிங் மூலம் தனது அறிக்கையை போலீசாருக்கு அளிக்கவுள்ளார்.

இதற்கிடையில் இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பமாக, மற்றொரு நடிகை மற்றும் மாடல் உட்பட மூன்று பெண்கள் இதே கும்பலுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். அவர்களில் எட்டு பேர் மாடலிங் பணிக்காக பாலக்காட்டில் ஒரு இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும், பின்னர் ஒரு வாரம் சிறைபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை பறித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதில் ஒரு நடிகை, தாங்கள் சிறைபிடிக்கப்பட்டபோது, கும்பல் உறுப்பினர்களில் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, தங்களையும் தங்கள் குடும்பத்தினருக்க ஏதாவது செய்துவிடுமோம் என்று அச்சுறுத்திய கும்பல், இந்த பெண்களை தங்களுக்காக தங்கத்தை கடத்த வேலை செய்ய கட்டாயப்படுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட பலரையும் கைது செய்ய விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com