முகப்புகோலிவுட்

'Dada... அடுத்து நீங்கதானா..?' - கங்குலி வாழ்க்கை வரலாற்றில் ஹிருத்திக் ரோஷன்..?

  | February 27, 2020 09:27 IST
Life History Movies

கங்குலியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் உருவாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது

துனுக்குகள்

  • இயக்குநர் கரண் ஜோகர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது
  • நடிகர் ஹிருத்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள்
  • 'Dada' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி
அண்மைக்காலமாகத் தமிழ் திரையுலகில் வாழ்க்கை வரலாறு படங்கள் எடுக்கப்படுவது மிகவும் அதிகமாகி உள்ளது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் என்று பலரின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகின்றது. கபில் தேவ், சச்சின் மற்றும் டோனி உள்ளிட்ட பலரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறும் 'தலைவி' என்ற தலைப்பில் படமாக எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சாய்னா நேவல் (பாட்மின்டன்), கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளும் படமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வாழ்க்கை வரலாறு படங்களின் வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான 'Dada' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தைப் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கங்குலி கதாபாத்திரத்தில் நடிக்கப் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்