முகப்புகோலிவுட்

கார்த்திக், கெளதம் சேர்ந்து நடித்துள்ள 'Mr.சந்திரமௌலி' எப்போது ரிலீஸ்?

  | May 28, 2018 17:50 IST
Gautham Karthik Mr Chandramouli

துனுக்குகள்

 • கார்த்திக் – கெளதம் இணைந்து நடிக்கும் முதல் படம்
 • இதில் ரெஜினா, வரலக்ஷ்மி சரத்குமார் என டபுள் ஹீரோயின்ஸாம்
 • இதன் டிரெய்லர் & பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
விஷாலின் 'நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு பிறகு இயக்குநர் திரு இயக்கியுள்ள புதிய படம் 'Mr.சந்திரமௌலி'. இதில் 'நவரச நாயகன்'கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இதனை 'கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்' நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ளார்.

கெளதம் கார்த்திக்கு ஜோடியாக ரெஜினா,வரலக்ஷ்மி சரத்குமார் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், இயக்குநர்கள் மகேந்திரன் - அகத்தியன், சதீஷ், சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், மனோபாலா, ஜெகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதாம். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வருகிற ஜூலை 6-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com