முகப்புகோலிவுட்

மீண்டும் கார்த்திக்-ஜெஸ்ஸி காதலை வெளிப்படுத்தும் GVM.! விரைவில் குறும்படம்..!

  | May 13, 2020 13:16 IST
Gautham Vasudev Menon

இந்த குறும்பத்துக்கு ‘கார்த்திக் டயல் செய்த எண்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் சிம்பு ஒரு தனித்துவமான நடிகர் என்பதில் மாற்றமில்லை. நடிப்பு, இயக்கம், நடனம், பாடல், திரைக்கதை, வசனம் என எல்லா துறையிலும் தன்னை சிறந்தவராக நிரூபித்துக் காட்டியவர். பன்முக திறமை கொண்ட அவர், தன் மீதுள்ள எதிர்மறையை பின்னுக்குத் தள்ளி, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாச்சி தயாரிக்கும் ‘மாநாடு' திரைப்படத்தில் நடித்துவருகிறார். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பூட்டுதலால் வீட்டில் இருக்கும் சிம்பு தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். ஆனால், இது ஒரு முழுநீள திரைப்படம் அல்ல, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் ஆகும். இதில் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும், கிளாஸிக் ஹிட்டான ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படக் கதாப்பாத்திரங்களான கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியாக மீண்டும் நடிக்கிறார்கள்.

த்ரிஷா குறும்படத்திற்கான தனது பகுதிகளை நிறைவு செய்துவிட்ட நிலையில், சிம்புவும் தனது வீட்டிலேயே நடைபெற்ற ஒரு சிறிய படப்பிடிப்பில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் பூட்டுதல் நெருக்கடி தொடர்பாக இருவருக்கும் இடையிலான உரையாடலைப் பற்றியது என்றும் கூறப்படுகிறது.

‘கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்தின் டீஸர் ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை  இணையத்தில் வெளியானது. அதில், த்ரிஷா தொலைபேசியில் கார்த்திக்கிடம் பேசும் காட்சி காட்டப்படுகிறது. அவர், பூட்டுதல் காரணமாக கவலைப்பட வேண்டாம் என்றும் எல்லாம் சரியாகிவிடும் என்றும் OTT தளங்களுக்கு நல்ல கண்டண்ட் தேவைப்படுவதால் கார்த்திக் நல்ல கதைகளை எழுத வேண்டும் என்றும் நம்பிக்கை கூறிவதாக அமைந்துள்ளது.

இக்குறும்படம் விரைவில் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியின் காதலை மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com