முகப்புகோலிவுட்

முதல் முறையாக கவுதம் வாசுதேவ் மேனனுடன் இணையும் GV Prakash!

  | September 14, 2019 14:17 IST
Gv Prakash

பிரபல இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனனுடன் (Gautham Menon) முதல் முறையாக இணைந்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் (GV Prakash) என்பது குறிப்பிடத்தக்கது

துனுக்குகள்

  • இந்த படத்தில் முதல் முறையாக கவுதம் வாசுதேவ் மேனனுடன் நடிக்கிறார் இவர்
  • மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்குகிறார்
  • ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகிறது
ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன் (Gautham Menon) .
 
கே புரொடக்ஷ்ன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக எஸ்.என். ராஜராஜன் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.
 
இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். கல்லூரி மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் பிரச்னையை பற்றி பேசும் அதிரடியான திரைக்கதையாக இப்படம் உருவாக இருக்கிறது. கல்லூரி மாணவனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இவர்களுடன் வாகை சந்திர சேகர், குணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.

ஆக்ஷ்ன் படத்தில் அதிரடியாக களம் இறங்கும் ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம்!

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவிதம் வாசுதேவ் மேனன் நடிக்கவிருக்கிறார் என்கிற செய்தி கிடைத்துள்ளது. பிரபல இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனனுடன் முதல் முறையாக இணைந்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்