முகப்புகோலிவுட்

விஷ்ணு விஷாலுடன் இணையும் கௌதம் மேனன்..!

  | December 27, 2019 12:32 IST
Vishnu Vishal

துனுக்குகள்

  • விஷ்ணு விஷால் அதுத்ததாக ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் நடித்துவருகிறார்.
  • இப்படத்துக்கு FIR எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
  • இப்படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார்.
இயக்குனர் கவுதம் மேனன் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

‘சிலுக்குவார்பட்டி' திரைப்படத்தை அடுத்து நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் திரைப்படம் "F.I.R" (Faizal Ibrahim Raiz). இதனை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் பேனரில் அவரே தயாரிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்குகிறார்.

எஃப்.ஐ.ஆர்-ன் முதக் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்துள்ளார். இந்த கதாப்பாத்திரம் படம் முழுக்க வரும் என கூறப்படுகிறது. இப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், கவுதம் மேனனிடம் துணை இயக்குனராக முன்னதாக பணியாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில், மஞ்சிமா மோகன், ரைஸா விலசன், ரெபா மோனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அருள் வின்சண்ட் ஒளிபதிவு செய்ய, பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்துக்கு அஷ்வத் இசையமைக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்