முகப்புகோலிவுட்

"இது சுஷாந்த்திற்கு சமர்ப்பணம்" - 'Dil Bechara' பாடலை பாடி அசத்திய ஹரிஷ்..!!

  | July 14, 2020 07:39 IST
Dil Bechara

துனுக்குகள்

 • மறைந்த நடிகர் சுஷாந்த் நடிப்பில் கடைசியாக உருவான 'Dil Bechara'
 • மேலும் இசைப்புயல் ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த படத்தின் டைட்டில் ட்ராக்
 • இந்த பாடலை கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு தனது நன்றி
மறைந்த நடிகர் சுஷாந்த் நடிப்பில் கடைசியாக உருவான 'Dil Bechara' என்ற திரைப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு இசைப்புயல் ரகுமான் அவர்களால் வெளியிடப்பட்டது. கேன்சர் பாதித்துள்ள ஒரு பெண்ணுக்காக அவளோடு இணைந்து போராடும் ஒரு கதாபாத்திரத்தில் சுஷாந்த் நடித்துள்ளார். 

மேலும் இசைப்புயல் ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த படத்தின் டைட்டில் ட்ராக் அண்மையில் வெளியானது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசை மற்றும் குரலில் அட்டகாசமாய் உருவாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது Dil Bechara-வின் டைட்டில் ட்ராக் பாடல். அந்த பாடலுக்கும், இசைப்புயலுக்கும் நம்மை விட்டு மறைந்த நாயகன் சுஷாந்த் அவர்களை நினைவுகூரும் வகையிலும் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு அழகிய நிகழ்வை செய்துள்ளார். 

"Dil Bechara" பாடலுக்கு புதிதாக இசை அமைத்து அவரே பாடியும் உள்ளார். அண்மைக்காலமாக இந்த பாடல் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் இந்த பாடலை கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடலை சுஷாந்த் மற்றும் அவரது ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com