முகப்புகோலிவுட்

நடிகை காயத்ரி வெளியிட்ட “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் இடம்பெறாத வைரல் வீடியோ

  | April 19, 2019 13:32 IST
Super Deluxe

துனுக்குகள்

  • தியாகராஜான் குமாராஜா இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார்
  • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்
ஆரண்யகாண்டம் திரைப்படத்திற்கு பிறகு பெரும் இடைவெளி எடுத்துக்கொண்டு இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இந்த ஆண்டு இயக்கி வெளிவந்த படம். “சூப்பர் டீலக்ஸ்”. இந்த படத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், இயக்குநர் மிஸ்கின் இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

   
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். திருநங்கை சமூகத்தினரிடம் இருந்து பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களையும் இந்த கதாபாத்திரம் பெற்றது.
 
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த காயத்ரி தற்போது தனது சமூகவலைதளபக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ “சூப்பர் டீலக்ஸ்' படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் இந்த காட்சி அந்த படத்தில் இடம் பெறவில்லை. இதில் திருநங்கை வேடத்தில் இருக்கும் விஜய் சேதுபதி காயத்ரியுடன் ஒரு பாடலுக்கு நடனமாடுவது போல் இருக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்