முகப்புகோலிவுட்

“தை மகள் வந்தாள்” பிரசன்னா-சினேகாவுக்கு பிறந்தது 2-வது குழந்தை..!

  | January 24, 2020 18:14 IST
Prasanna

துனுக்குகள்

  • பிரசன்னா - சினேகாவிற்கு 2012-ஆம் ஆண்டு திருமணம் ஆனது.
  • இந்த நட்சத்திர தம்பதிக்கு விஹான் எனும் மகன் உள்ளார்.
  • சினேகா சமீபத்தில் தனுஷுடன் ‘பட்டாஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நட்சத்திர தம்பதியான பிரசன்னா மற்றும் சினேகாவுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகர்களான பிரசன்னா மற்றும் சினேகாவிற்கு 2012-ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த நட்சத்திர தம்பதிக்கு விஹான் எனும் மகன் உள்ளார். ஆரம்பத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துவந்த இருவரும் தற்போது, நல்ல நல்ல கதாப்பாத்திரங்களில் அவ்வப்போது படங்களில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் பிரசன்னா துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வெளியா துப்பரிவாளன், திருட்டுப் பயலே ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அவர் தற்போது, மாஃபியா, துப்பரிவாளன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், நடிகை சினேகா தனுஷுக்கு ஜோடியாக சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பட்டாஸ்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரின் ‘அடிமுறை' சண்டை காட்சிகள் நல்ல பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது. மேலும் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவர்களாக கலந்துகொண்டு வருகிறார்.

Its a girl❤❤

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on


இந்நிலையில், இந்த நட்சத்திர தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக பெண்பிள்ளை பிறந்துள்ளார். இதனை, சினேக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்று வெளியிட்டு பதிவிட்டுள்ளார். இரண்டாவது முறையாக தந்தையான பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் பிரசன்னாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதே புகைப்படத்தை வெளியிட்டு “தை மகள் பிறந்தாள்” என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த தம்பதிக்கு இணையம் முழுக்க வாழத்துக்கள் குவிந்துவருகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்