முகப்புகோலிவுட்

ஒற்றுமையின் அடையாளம்..! - 100 கலைஞர்களுடன் இணையும் 'அண்ணாத்த' இசையமைப்பாளர்..!

  | August 14, 2020 12:27 IST
Independance Day

துனுக்குகள்

 • தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த பல அற்புதமான இசையமைப்பாளர்களில் நிச்சயம்
 • இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா மற்றும், கும்கி ஆகிய
 • இந்நிலையில் நாளை நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில்
தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த பல அற்புதமான இசையமைப்பாளர்களில் நிச்சயம் டி. இமான் அவர்களுக்கு சிறப்பான இடமுண்டு. 2002ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே பெரிய அளவில் பெயர்பெற்ற இசையமைப்பாளராக அவர் உயர்ந்தார்.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா மற்றும், கும்கி ஆகிய இரு படங்களில் இசையமைத்ததற்காக இவர் பல விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த 2021ம் ஆண்டு வெளிவர இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்திற்க்கு இவர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 2020ம் ஆண்டு மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து வருகின்றார். 

இந்நிலையில் நாளை நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் MCAI (இந்திய இசையமைப்பாளர் சங்கம்) சார்பில் நடத்தப்படும் நிகழ்வில் இந்திய அளவில் 100 இசை கலைஞர்கள் ஒரு நற்காரியதற்காக பங்கேற்க உள்ளனர். அதில் ஒரு அங்கமாக திரு. இமான் அவர்கள் உள்ளது அவருக்கு பெருமை அளிப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com